திருபுவனம் ஜானகிராமன் கமலா அறக்கட்டளையின் சார்பில் 27.05.1996 அன்று 5 குழந்தைகளோடு அம்மாசத்திரம் சோழன் நகரில் நண்பர் ஒருவரது வீட்டின் மாடியில் தி ஸ்ப்ரிங் இங்கிலீஷ் ஸ்கூல்என்ற பெயரில் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது

இந்த அறக்கட்டளையின் தலைவராக திரு வாணால் கி. ஜானகிராமன் செயலராக திருமதி கமலாஜானகிராமன் பொருளராக திருமதி மூர்த்தியம்மா நர்மதா மோகன் நிர்வாக அறங்காவலராக திரு ஜா. பாஸ்கர் இருக்கிறார்கள் . திரு ஜா. பாஸ்கர் பள்ளியின் தாளாளர் ஆகவும் திரு நர்மதா பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆகவும் உள்ளனர். தற்போது 17ஆம் கல்வி ஆண்டில் (2013-2014) 150 மாணவர்களும் 7 ஆசிரியைகளும், ஒரு ஆயாவும் உள்ளனர்.

பள்ளி துவங்கிய இரண்டாம் ஆண்டிலேயே பள்ளிக்கென ஒரு பக்கா கட்டிடம் கட்டப்பட்டு தமிழக கல்வித் துறையின் அங்கீகாரம், பெறப்பட்டது. தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டும் வருகிறது. தற்போது 1200 ச.அடி அளவில் தரைத் தளமும், 800 ச.அடி அளவில் முதல் தளமும் இரு மாடி வழியும் உள்ளது. மொத்தமாக 4800 ச.அடி அளவில் பள்ளி செயல்படுகிறது.

மாணவக் குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் அறிவியல் கண்காட்சி கணிதக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆர்யபட்டா அறிவியல் மன்றம், பள்ளியில்செயல்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திலேயே முதன் முதலில் சாரண இயக்க குழந்தைகள் பிரிவான குருளையர்கள் நீலப்பறவையினர்கள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

தஞ்சாவூர் பாரம்பரிய கலை மன்றம் நடத்திய மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் ஸ்பிரிங் பள்ளி மாணவர்கள் வென்றனர். 17 ஆண்டுகளில் இப்பள்ளியில் படித்த பலமாணவர்கள் பொறியியல் மருத்துவம் படித்து வருகின்றனர் சிலர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைக்கும், சென்று விட்டனர். அவர்களில் பணியில் இருப்பவர்களை ஒவ்வொரு ஆண்டு விழாவிற்கும்அழைத்து பாராட்டுகிறோம். படித்து வரும் மாணவர்கள் உற்சாகம் அடைந்து தாங்களும் சாதிக்க என நினைப்பார்கள்

அடிப்படை கல்வியில் ஆழ்ந்த திறமை பெற்று சுலபமாக உயர் கல்வியை எளிதில் புரிந்து கொள்ளும், திறன் நமது பள்ளியில் வளர்க்கப்படுகிறது. அதனால் எங்கள் பள்ளியில் ஆரம்பக் கல்வி பெற்றவர்கள்மேல் வகுப்பில் சிறந்த அடித்தளத்தைத் தாங்களே அமைத்துக் கொள்ள முடிகிறது.

மேலும் சாதனை புரிய நாங்கள் காத்திருக்கிறோம் நல்ல திறமை உள்ள மாணவர்கள் மூலம் புதிய இந்தியாவை படைப்போம்.